Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அண்ணா 115-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் ..அதிமுக தலைமை கழகம்

அண்ணா 115-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் ..அதிமுக தலைமை கழகம்

By: vaithegi Thu, 07 Sept 2023 12:26:38 PM

அண்ணா 115-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்  ..அதிமுக தலைமை கழகம்

சென்னை: ஈபிஎஸ் மரியாதை ... அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துதல்! 15.9.2023 வெள்ளிக் கிழமை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாளான 15.9.2023 - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில்,

சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார். தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.

aiadmk chief,edappadi palaniswami ,அதிமுக தலைமை கழகம் , எடப்பாடி  பழனிசாமி

இதையடுத்து இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை,

மேலும் இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது." என அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :