Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து வெளிவட்டச் சாலை வழியே இயக்கம்

தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து வெளிவட்டச் சாலை வழியே இயக்கம்

By: vaithegi Wed, 08 Nov 2023 12:44:46 PM

தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து வெளிவட்டச் சாலை வழியே இயக்கம்

சென்னை: ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்களின் கவனத்திற்கு ...அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளதாவது , தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 9, 10, 11 தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேடில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்.

இந்தேதிகளில் நகரத்தின் உட் பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெரு

diwali,outer ring road ,தீபாவளி, வெளிவட்டச் சாலை

எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்லலாம். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிசசேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம் போன்று இயக்கப்படும்.

மேலும் ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம் வசூலிக்கும்படி உரிமையாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டு உள்ளது. ஆம்னி பேருந்துகள் கட்டண விபரம் www.aoboa.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ஆம்னி பேருந்து சம்மந்தமான புகார்களை 9043379664 என்ற சங்க தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவித்துள்ளது.

Tags :
|