Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது

சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது

By: vaithegi Thu, 11 Aug 2022 1:09:05 PM

சுதந்திர தின விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது

சென்னை: ஆகஸ்ட் 15 ம் தேதி நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவில் நாட்டில் சிறப்பாக பணியாற்றிய துறைகளில் உள்ள தகுதியானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய துறைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக குறிப்பிட்ட சில பிரிவினருக்கு தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு கொண்டு வருகின்றன. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்குவதற்காக சிறந்த சேவையாற்றிய நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மேலும் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஜூலை 15ம் தேதி தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்படி மாற்று திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்ததற்காக சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராம் அவர்களுக்கும், மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் அ. அருண் தம்புராஜ்க்கும் வழங்கப்படுகிறது.

independence day ceremony,awards ,சுதந்திர தின விழா,விருதுகள்

இதே போன்று சிறந்த மருத்துவர் விருதுக்கு உதகை மலை வீதி மருத்துவமனை குடியிருப்பை சேர்ந்த டாக்டர். பா.ஜெய் கணேஷ்மூர்த்திக்கும், சிறந்த நிறுவனத்துக்கான விருது புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் களமாவூர் ரெனேஸான்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் சிறந்த சமூக பணியாளர் விருது மதுரை எஸ்.எஸ். காலனியை சேர்ந்த அமுத சாந்திக்கும், மாற்றுத்திறனாளிகளை அதிகளவு பணியமர்த்திய நிறுவனத்துக்காக புதுக்கோட்டை மாவட்டம் நாகமலை அலம்பட்டி, மதுரை-தேனீ சாலையில் உள்ள டாபே ஜே ரிஹாப் சென்டர் நிறுவனத்துக்கும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் வழங்கப்படுகிறது. மேலும் இத்தகைய விருதுகள் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர்களை தவிர மற்ற அனைவருக்கும் முதல்வரால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :