Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளூர், திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்ஆளுமை விருது .. அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளூர், திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்ஆளுமை விருது .. அரசு அறிவிப்பு

By: vaithegi Fri, 12 Aug 2022 3:13:24 PM

சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளூர், திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்ஆளுமை விருது ..  அரசு அறிவிப்பு

சென்னை : நாட்டின் 75வது சுதந்திரதினம் கொண்டப்பட இருக்கிறது. சென்னை மெரினா கடற்கரையில் ஆண்டுதோறும் அலங்கார ஊர்திகள், காவலர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் கொடியேற்றம் நடைபெறும்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் சுதந்திரத்தினவிழாவில், சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் திருவள்ளூர், திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்ஆளுமை விருதை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

good character award,govt notification ,நல்ஆளுமை விருது ,அரசு அறிவிப்பு

மேலும் சென்னை காவல் ஆணையர், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலர், வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளருக்கு நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மழைநீர் சேகரிக்கப்பட்டு மூன்று அடுக்குகளாக சுத்தரிக்கப்பட்டு தரைமட்ட தொட்டியில் சேமித்து கழிவறை, கை கழுவுதல் ,பாத்திரங்கள் கழுவுதல் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதுடன் மிகை நீரினால் நிலத்தடி நீரும்செறிவூட்டப்படுகிறது. இந்த முயற்சிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

அதேபோன்று சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை மீட்டு உருவாக்கி புனரமைத்தல் காரணத்திற்காகவும், திருநெல்வேலியில் தாய்மார்களின் பேறு கால நலனை தகவல் தொழில்நுட்பங்களின் மூலம் கண்காணித்து , பொது சுகாதார அமைப்புகளை செயல்படுத்துவதன் மூலம் பேறு கால இறப்புகளின் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காகவும் நல் ஆளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :