Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் திருவட்டார் கோயில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியது

மீண்டும் திருவட்டார் கோயில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியது

By: Nagaraj Sun, 12 July 2020 9:43:01 PM

மீண்டும் திருவட்டார் கோயில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியது

பக்தர்கள் எதிர்பார்ப்பு... ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் மீண்டும் சிக்கியுள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஆலய சொத்துக்கள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற ஆலயங்களுள் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இவ்வாலயம் தற்போது தமிழக அரசு இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது.

இவ்வாலயத்திற்கு சொந்தமான சுமார் 110ஏக்கர் தோட்டம் திருவட்டார் ஆனையடி பகுதியில் உள்ளது, ஆக்கிரமிப்பாளர்கள் சிக்கியிருந்த இந்த ரப்பர் தோட்டத்தை 2015ஆம் வருடம் நீதிமன்ற துணையுடன் பக்தர்கள் மீட்டெடுத்து தோட்டத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டது.

occupancy,kanyakumari,thiruvattar,adigesava perumal,adangam ,ஆக்கிரமிப்பு, கன்னியாகுமரி, திருவட்டார், ஆதிகேசவ பெருமாள், ஆதங்கம்

பின்னர் தனியார் துணையுடன் ரப்பர் மரங்கள் நடப்பட்டு தற்போது பால்வெட்டும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த முள் வேலிகளை அகற்றி நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் கையிலிருந்து நிலத்தை உடனடியாக கையகப்படுத்தி சுற்றிலும் காம்பவுண்டு அமைத்து ஆலய சொத்தை பாதுகாக்க வேண்டுமென்று பக்தர்கள் மற்றும் அப் பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

Tags :