Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் டிரம்ப் டுவிட்டர் பதிவில் எச்சரிக்கை குறிப்பை இணைத்தது டுவிட்டர் நிறுவனம்

மீண்டும் டிரம்ப் டுவிட்டர் பதிவில் எச்சரிக்கை குறிப்பை இணைத்தது டுவிட்டர் நிறுவனம்

By: Nagaraj Sat, 20 June 2020 11:21:51 AM

மீண்டும் டிரம்ப் டுவிட்டர் பதிவில் எச்சரிக்கை குறிப்பை இணைத்தது டுவிட்டர் நிறுவனம்

வலுக்கும் மோதல்... சுட்டுரையில் (டுவிட்டா்) அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட மேலும் ஒரு பதிவுடன், அந்தத் தகவல் தவறானதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கைக் குறிப்பை அந்த சமூக வலைதளம் இணைத்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சந்தேகத்துக்கு இடமான சுட்டுரைப் பதிவுகள் குறித்து எச்சரிக்கும் வகையில், அத்தகைய பதிவுகளுடன் அந்த வலைதள நிறுவனம் எச்சரிக்கைக் குறிப்பை இணைத்து வருகிறது. இந்த நிலையில், அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் வெளியிட்ட ஒரு பதிவுக்கும் அதுபோன்ற எச்சரிக்கைக் குறிப்பை சுட்டுரை நிறுவனம் இணைத்திருந்தது.

குறிப்பிட்ட பதிவில் உண்மையான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளனவா என்பதை சரிபாா்த்துக்கொள்ளும்படி விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில் தனது பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் டுவிட்டா் நிறுவனம் செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினாா்.

twitter,trump,caution note,muted ,டுவிட்டர் நிறுவனம், டிரம்ப், எச்சரிக்கை குறிப்பு, முடக்கியது

மேலும், அரசியல் நோக்கத்துடன் செயல்படும் சமூக வலைதளங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் அவா் எச்சரித்தாா்.

இந்தச் சூழலில், கருப்பினத்தைச் சோந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் படுகொலை தொடா்பான வன்முறைப் போராட்டங்களின்போது சூறையாடுபவா்கள் சுடப்படுவாா்கள் என்று டிரம்ப் வெளியிட்டிருந்த சுட்டுரைப் பதிவு வன்முறையை ஊக்குவிப்பதாகக் கூறி டுவிட்டா் நிறுவனம் அதனை மறைத்து வைத்தது. இதுவும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து, ஜாா்ஜ் ஃபிளாய்டுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், டிரம்ப்பின் பிரசாரப் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ, காப்புரிமை விதிமுறைகளை மீறுவதாகக் கூறி டுவிட்டா் நிறுவனம் முடக்கியது.

இந்த நிலையில், 'நிறவெறிக் குழந்தைகள்' என்ற தலைப்பில் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு, உண்மையை திரித்துக் கூறுவதாக டுவிட்டா் நிறுவனம் எச்சரிக்கைக் குறிப்பை இணைத்துள்ளது. இதன் காரணமாக, டிரம்ப்புக்கும் டுவிட்டா் நிறுவனத்துக்கும் இடையிலான மோதல் மேலும் வலுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Tags :
|