Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனையான ஒன்றரை டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல்

சென்னையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனையான ஒன்றரை டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல்

By: Nagaraj Thu, 04 May 2023 8:11:10 PM

சென்னையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனையான ஒன்றரை டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல்

சென்னை: அதிகாரிகள் நடவடிக்கை... சென்னை நுங்கம்பாக்கத்தில் சுகாதாரமற்ற முறையில் சாலையோர கடைகளில் விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பழங்களால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்றும், தானே ஒரு முறை அவ்வாறு பழுக்கவைக்கப்பட்ட தர்பூசணி பழத்தை உட்கொண்டு பாதிப்படைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

warning,merchants,fines,imposed,rotten fruit ,எச்சரிக்கை, வியாபாரிகள், அபராதம், விதித்தனர், அழுகிய பழங்கள்

இந்நிலையில், திடீரென இன்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்து, அவை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டனவா என ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அழுகிய பழங்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, அபராதமும் விதித்தனர்.

Tags :
|