Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்; ஆகஸ்டிற்குள் அமல்படுத்தப்படும்

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்; ஆகஸ்டிற்குள் அமல்படுத்தப்படும்

By: Nagaraj Thu, 14 May 2020 6:36:54 PM

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்; ஆகஸ்டிற்குள் அமல்படுத்தப்படும்

ஆகஸ்ட் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும்... வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மேலும் 2 மாதம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். ரேஷன் கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் விலையில்லா உணவுப் பொருள்கள் கிடைக்கும். வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும்.

one country,one rationkad,august,effective,rent ,ஒரே நாடு, ஒரே ரேஷன்காடு, ஆகஸ்ட், அமல்படுத்தப்படும், வாடகை

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் அரிசி அல்லது கோதுமை தலா 5 கிலோ , 1 கிலோ பருப்பு வழங்கப்படும். 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானியங்கள் கிடைக்கும்.

அடுத்த இரு மாதங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவுதானியங்கள் வழங்க ரூ. 3,500 கோடி செலவாகும்.

வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 83 சதவீகிதம் அமல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 100 சதவீதம் அமல்படுத்தப்படும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மலிவு வாடகையில் வீடுகள் வழங்க திட்டம் அமல்படுத்தப்படும்.

Tags :
|