Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நேபாள ஆயுத காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

நேபாள ஆயுத காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

By: Karunakaran Sat, 13 June 2020 1:35:07 PM

நேபாள ஆயுத காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

இந்தியா-நேபாளம் இடையே 1800 கி.மீ. நீளம் வரை எல்லை உள்ளது. இந்த எல்லைப்பகுதியில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் லிபுலேக் என்ற கணவாய் இருக்கிறது. அதன் அருகே லிம்பியாதுரா, காலாபானி ஆகிய இடங்களும் உள்ளன. இந்த பகுதி இந்தியாவுக்கு சொந்தமானதாகும். ஆனால் இந்த இடங்களை உள்ளடக்கி நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த 3 பகுதிகளையும் நேபாள பகுதியாக நேபாள அரசு காட்டியுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீதாமர்கி என்ற இந்திய-நேபாள எல்லை பகுதியில் நேபாள நாட்டை சேர்ந்த ஆயுத காவல் படையினர் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். சட்டவிரோதமாக இந்தியர்கள் சிலர் எல்லையைக் கடக்க முயன்றதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் தற்போது வெடித்துள்ள எல்லைப் பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

nepal,indian,armed forces firing,india border ,உத்தரகாண்ட்,நேபாளம்,இந்தியர் ,எல்லை பகுதி

இதுகுறித்து இரு நாடுகளின் மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இது உள்ளூர் பிரச்சனை. இதற்கும் எல்லைப் பிரச்சினைக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த எல்லைப் பகுதியில் வேலி கிடையாது. ஆனால் இந்திய பகுதியைச் சேர்ந்த லகன் யாதவ் என்பவர், நேபாள பகுதியில் உள்ள தனது மருமகளை பார்க்க எல்லையை தாண்டி வந்ததால் பிரச்சினை ஏற்பட்டதாக நேபாள ஆயுதப்படை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் காயமடைந்துள்ளனர். லகன் யாதவை நேபாள போலீசார் பிடித்துச் சென்று இன்று காலை விடுவித்தனர்.

இந்திய-நேபாள எல்லையின் இருபுறமும் உள்ள பொதுமக்களுக்கு குடும்பங்கள் இரு புறமும் உள்ளன. எல்லையில் வேலி இல்லாததால், குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க சென்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், நேபாள போலீசில் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்திய பகுதிக்கு திரும்பிய லகன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்திய பகுதிக்கு ஓடி வந்தபின், நேபாள போலீசார் இழுத்துச் சென்று தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|