Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு ஒரு லட்சம் தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு ஒரு லட்சம் தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்

By: Nagaraj Tue, 18 Aug 2020 4:16:05 PM

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு ஒரு லட்சம் தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்

ஒரு லட்சம் தன்னார்வலர்கள் முன் வந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் முன்வந்துள்ளதாக லண்டன் அரசு தெரிவித்துள்ளது. தேசிய மருத்துவ சேவையில் மேலும் பல தன்னார்வலர்களை சேர்க்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் லண்டன் அரசு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்படுள்ள அறிக்கையில், தடுப்பு மருந்து பரிசோதனைக்காக பல்வேறு தரப்பட்ட தன்னார்வலர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். தடுப்பு மருந்து அவசியம் தேவைப்படுவோர்களான 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் பரிசோதனை செய்துகொள்ள முன்வரவேண்டும்.

one lakh people,corona,experiment,registration,volunteers ,ஒரு லட்சம் பேர், கொரோனா, பரிசோதனை, பதிவு, தன்னார்வலர்கள்

மிகப்பெரிய அளவில் தடுப்பு மருந்து பரிசோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், வரும் அக்டோபர் மாதத்திற்குள் தடுப்பு மருந்து தேவைப்படும் பலரை பரிசோதனைக்காக பதிவு செய்ய ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இதுவரை 3,21,060 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41,454 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|