Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறுபான்மையின மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுத மேலும் ஓராண்டு விலக்கு

சிறுபான்மையின மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுத மேலும் ஓராண்டு விலக்கு

By: Nagaraj Tue, 07 Feb 2023 9:24:09 PM

சிறுபான்மையின மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுத மேலும் ஓராண்டு விலக்கு

புதுடில்லி: ஓராண்டு விலக்க அளிக்க உத்தரவு... 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மொழிச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ்த் தேர்வு எழுத, மேலும் ஓராண்டு விலக்கு அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு 2006-ஆம் ஆண்டு தமிழ்க் கட்டாயக் கற்றல் சட்டத்தை அறிமுகப்படுத்தி, அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாகப் பாடமாக்கியது.

இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிற மொழிப் பள்ளி மாணவர்களும் பொதுத் தேர்வில் தமிழ்த் தேர்வை எழுத வேண்டும். இதற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

compulsory,government,linguistic,tamil nadu , கன்னடம், தமிழ்நாடு, புதுதில்லி, மலையாளம்

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை அமலில் இருந்தது.

தமிழகத்தில் மட்டும் இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. இதில் மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கம் சார்பில் வாதிடப்பட்டது. 2022-23ம் கல்வியாண்டில், மனுதாரர் சார்பில் ஆஜரான 863 மாணவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்ச நீதிமன்றம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மொழிச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ்த் தேர்வு எழுத, மேலும் ஓராண்டு விலக்கு அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags :