Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரு ரூபாய் அபராதம்... இல்லாட்டி 3 மாதம் சிறை; பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

ஒரு ரூபாய் அபராதம்... இல்லாட்டி 3 மாதம் சிறை; பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

By: Nagaraj Mon, 31 Aug 2020 5:52:10 PM

ஒரு ரூபாய் அபராதம்... இல்லாட்டி 3 மாதம் சிறை; பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

பிரசாந்த் பூஷணுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ரூ.1 அபராதம் விதித்தது. அபராதம் கட்டாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே குறித்தும், நீதிமன்றத்தின் கடந்த கால நடவடிக்கைகளை விமர்சித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த 29-ம் தேதி, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

அப்போது பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க கால அவகாசத்தையும் நீதிமன்றம் வழங்கியது. ஆனாலும் இந்த வழக்கு விசாரணையின், தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்ல என்று கூறிய பிரசாந்த் பூஷண், மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

court,jail,penalty,lawyer profession ,நீதிமன்றம், சிறை தண்டனை, அபராதத் தொகை, வக்கீல் தொழில்

இந்நிலையில் இந்த வழக்கில், நீதிபதிகள் அருண் மிஷ்ரா, பி. ஆர் கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று கூறிய நீதிமன்றம், அவர் 1 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தது.

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் இந்த அபராதத் தொகைய செலுத்தவில்லை என்றால், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு வக்கீல் தொழிலை செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags :
|
|