Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு வங்க மாநிலத்தில் வெப்பத்தின் எதிரொலி .. பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை

மேற்கு வங்க மாநிலத்தில் வெப்பத்தின் எதிரொலி .. பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை

By: vaithegi Mon, 17 Apr 2023 12:41:44 PM

மேற்கு வங்க மாநிலத்தில் வெப்பத்தின் எதிரொலி ..  பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை

மேற்கு வங்கம் : நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒரு வாரம் விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்கள் யாரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

school,college,vacation,heat ,பள்ளி, கல்லூரி,விடுமுறை ,வெப்பம்

முன்னதாகவே மேற்கு வங்க அரசு வெயிலின் காரணமாக மலைப்பகுதிகள் தவிர, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் கோடை விடுமுறையை மே 2-ம் தேதி வரை 3 வாரங்களுக்கு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி கொண்டு வருகிறது.

மேலும் வெப்ப அலை நிலை ஏப்ரல் 19-ம் தேதி வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


Tags :
|