Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பதவியேற்று ஓராண்டு நிறைவு... விழாக்கள் நடத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவுறுத்தல்

பதவியேற்று ஓராண்டு நிறைவு... விழாக்கள் நடத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவுறுத்தல்

By: Nagaraj Mon, 16 Nov 2020 8:17:51 PM

பதவியேற்று ஓராண்டு நிறைவு... விழாக்கள் நடத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவுறுத்தல்

விழாக்கள் எதுவும் நடத்தக்கூடாது... ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று எதிர்வரும் 18ம் திகதி ஓராண்டு பூர்த்தியாகின்றது. தமக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் எவ்வித நிகழ்வுகளையும் செய்ய வேண்டாம் எனவும் வீண் செலவுகளை செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

special text,ceremonies,no,president,instruction ,விசேட உரை, விழாக்கள், வேண்டாம், ஜனாதிபதி, அறிவுறுத்தல்

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றியீட்டினார். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி அனுராதபுரத்தில் வைத்து கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|