Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக அதிகரிப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக அதிகரிப்பு

By: vaithegi Tue, 11 July 2023 10:24:34 AM

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக அதிகரிப்பு

சென்னை: கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகத்திற்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது. எனவே இதன் காரணமாக தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது.

இதனையடுத்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று தக்காளி கிலோவிற்கு 100 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 140 ரூபாயாகவும் விற்பனையான நிலையில், இன்று 1 கிலோ தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை விற்பனையில் 130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

onions,koyambedu market,chennai ,சின்ன வெங்காயம்,சென்னை கோயம்பேடு மார்க்கெட்

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 220 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

கனமழை மற்றும் பருவமாற்றத்தின் காரணமாகவும் விளைச்சல் குறைந்து உள்ளதால், விலை ஏற்றம் உள்ளதாகவும், இந்த நிலை இன்னும் சிறிது காலம் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags :
|