Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெங்காயத்தின் விலை வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் உயர்வு

வெங்காயத்தின் விலை வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் உயர்வு

By: vaithegi Tue, 18 Oct 2022 10:07:10 AM

வெங்காயத்தின் விலை வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் உயர்வு

சென்னை: வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் உயர்வு ... தமிழகத்திற்கு பல பகுதிகளில் இருந்து தினந்தோறும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் தமிழகத்திற்கு காய்கறிகள் வருகின்றன.

இதையடுத்து தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது . எனவே இதன் காரணமாக காய்கறிகளின் விலை தற்போது தமிழகத்தில் உயர்ந்துள்ளது குறிப்பாக சின்ன வெங்காயம் விலை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

onion,height,price ,வெங்காயம் ,உயர்வு    ,விலை

மேலும் 2 வாரங்களுக்கு முன்பு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்து நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையானது அதேபோன்று பெரிய வெங்காயத்தின் விலை வழக்கத்தை விட 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளது

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் தரத்தின் அடிப்படையில் கிலோ ரூபாய் 60 முதல் 120 வரை விற்கப்படுகிறது. நேற்று ரூபாய் 50 முதல் 90 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை இன்று 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Tags :
|
|