Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்

By: vaithegi Mon, 20 June 2022 10:06:49 PM

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்

தமிழகம்: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாதொற்று பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்குரிய தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.

அத்துடன் அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் எந்தவித இடையூறும் இன்றி நடைபெற்றது. இதையடுத்து தேர்வின் முடிவுகளுக்காக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மாணவர்கள் உயர்கல்வியில் சேர தயார் நிலையில் உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த கொண்டு வந்ததால் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

online,application registration,student education ,ஆன்லைன் ,விண்ணப்ப பதிவு,மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை

தற்போது அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பொறியியல் படிப்பில் பாடத்திட்டம் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இன்று முதல் https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரி வாயிலாக பதிவு செய்யலாம் என்றும தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விண்ணப்ப படிவத்துடன் அசல் சான்றிதழ்களை வருகிற ஜூலை 19ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் அத்துடன் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|