Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு இணைய வழியில் நாளை கலந்தாய்வு

முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு இணைய வழியில் நாளை கலந்தாய்வு

By: Nagaraj Sun, 06 Aug 2023 7:00:29 PM

முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு இணைய வழியில் நாளை கலந்தாய்வு

சென்னை: நாளை கலந்தாய்வு... முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில அரசின் கலந்தாய்வு இணையவழியில் நாளை திங்கள்கிழமை (ஆக.7) தொடங்கவுள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோவில் தகுதிப் பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் கலந்தாய்வு நடத்துகிறது.

எம்.டி. எம்.எஸ்., டிப்ளமோ மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளுக்கான 2023-2024-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோக்கைக்கான கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

masters,medical,consultancy,public health,applications ,முதுநிலை, மருத்துவப்படிப்பு, கலந்தாய்வு, மக்கள் நலவாழ்வுத்துறை, விண்ணப்பங்கள்

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது.

எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளுக்கான 2023-2024-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோக்கைக்கான மாநில கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 6-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி நிறைவடைந்தது. பரிசீலனைக்குப் பின்னா், எம்.டி., எம்.எஸ்., டிப்ளமோ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,526 விண்ணப்பங்கள், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

எம்.டி.எஸ். படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 661 விண்ணப்பங்கள், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையும் படிக்க: தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு மக்கள் நல்வாழ்வுத்துறை இணையதளங்களில் நாளை, திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.

Tags :