Advertisement

ஆன்லைன் விளையாட்டு ... ஜிஎஸ்டி உயர்வு

By: vaithegi Tue, 22 Nov 2022 6:28:51 PM

ஆன்லைன் விளையாட்டு    ...    ஜிஎஸ்டி உயர்வு

இந்தியா: ஜிஎஸ்டி உயர்வு ..... இந்தியாவில் மட்டும் மொத்தம் 400 ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் உள்ளது. இதில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட நபர்கள் பணி புரிந்து கொண்டு வருகின்றனர். இந்த விளையாட்டு 2 வகைகளாக உள்ளது. ஒன்று Game of chance மற்றொன்று திறமையை பொருத்தது

அதாவது Game of skill ஆகும். இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எவ்வளவு GST விதிப்பது என்பது பெரும் குழப்பமாகவே இருந்து வந்தது. அதன் பிறகு 18% ஆக நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

gst,online game ,ஜிஎஸ்டி , ஆன்லைன் விளையாட்டு

இதையடுத்து இந்த நிலையில் மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டிற்கான ஜிஎஸ்டியை உயர்த்த முடிவு செய்தது. இது பற்றி ஆலோசிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கபட்டது. இந்த அமைச்சர் குழு தனது இறுதி கட்ட முடிவை தற்போது அறிவித்துள்ளது.

இனி அனைத்து வகை ஆன்லைன் விளையாட்டிற்கும் 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன்படி இனி கேசினோ மற்றும் குதிரை பந்தயம் போன்ற விளையாட்டுகளுக்கான ஜி.எஸ்.டியை 18 சதவிகிதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்கிறது.

Tags :
|