Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் கல்வி கற்க இந்தியாவில் 24 சதவீத குடும்பங்களில்தான் இணைய வசதி உள்ளது - யுனிசெப்

ஆன்லைன் கல்வி கற்க இந்தியாவில் 24 சதவீத குடும்பங்களில்தான் இணைய வசதி உள்ளது - யுனிசெப்

By: Karunakaran Fri, 28 Aug 2020 2:44:17 PM

ஆன்லைன் கல்வி கற்க இந்தியாவில் 24 சதவீத குடும்பங்களில்தான் இணைய வசதி உள்ளது - யுனிசெப்

குழந்தைகள் கல்வி தொடர்பான ஐ.நா. அமைப்பான ‘யுனிசெப்’, கொரோனா காலத்தில் கல்வி சென்றடையும் விகிதம் குறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது 100 நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட புள்ளி விவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், ஆன்லைன் கல்வி கற்பதற்கு இந்தியாவில் வெறும் 24 சதவீத குடும்பங்களில்தான் இணைய வசதி இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கிராமம்-நகரம் இடையிலும், ஆண்-பெண் இடையிலும் வேறுபாடு நிலவுகிறது. உயர்வருவாய், நடுத்தர வருவாய் குடும்பங்களுக்கும், குறைந்த வருவாய் குடும்பங்களுக்கும் இடையிலான கற்றல் இடைவெளி இன்னும் அதிகரித்துள்ளது. பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு கற்றல் வசதி கிடைக்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

household,india,online education,unicef ,வீடு, இந்தியா, ஆன்லைன் கல்வி, யுனிசெஃப்

ஏழ்மையான குடும்பத்து குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும், இணைய வசதி சுமாராக இருக்கிறது. இந்தியா முழுவதும் 15 லட்சம் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிவரை 28 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிப்பேர் பெண் குழந்தைகள் ஆவர் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

மேலும், இத்தகைய குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கும்வகையில் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயம், பெற்றோர், தன்னார்வ தொண்டர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|