Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் பரவலை ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது-இங்கிலாந்து விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் பரவலை ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது-இங்கிலாந்து விஞ்ஞானிகள்

By: Karunakaran Thu, 11 June 2020 12:19:25 PM

 கொரோனா வைரஸ் பரவலை ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது-இங்கிலாந்து விஞ்ஞானிகள்

சீனாவில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இன்று வரை தொடர்ந்து கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

உலகளவில் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 4 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கொரோனா வுக்கு முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.

curfew,england,coronavirus,china ,ஊரடங்கு,இங்கிலாந்து,கொரோனா வைரஸ்,சீனா

ஒவ்வொரு நாடும் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையும் வந்து தாக்கும் என உலகளவில் விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இங்கிலாந்து நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் என்னும் ஊரடங்கு மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது. இதில் முக கவசங்களுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கின்றன. 50 சதவீதமோ அதற்கு மேற்பட்டவர்களோ முக கவசங்களை அணிகிறபோது, அது கொரோனா வைரஸ் பரவலை குறைக்கிறது என்று தெரிய வந்துள்ளது. மேலும், ஊரடங்கு இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி 100 சதவீத மக்களும் முக கவசங்களை எப்போதும் அணிந்து கொள்கிறபோது, அது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
|