Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கைக்கு இந்தியா மட்டுமே கடனுதவி செய்கிறது……. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கைக்கு இந்தியா மட்டுமே கடனுதவி செய்கிறது……. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

By: vaithegi Thu, 09 June 2022 09:45:48 AM

இலங்கைக்கு  இந்தியா மட்டுமே கடனுதவி செய்கிறது……. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு :இலங்கை கடந்த சில மாதங்களே எரிபொருள், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் பொன்ற பொருளாதார நெருக்கடியை கையாண்டு வந்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா மட்டுமே எரிபொருள் வாங்க பண உதவி செய்கிறது. பொருளதார நெருக்கடியால் இலங்கைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இலங்கையில் எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

prime minister ranil wickremesinghe,sri lanka,international monetary fund,fuel ,பிரதமர் ரணில் விக்ரமசிங்கே , இலங்கை, சர்வதேச நாணய நிதியம், எரிபொருள்

இந்நிலையில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி கோரியுள்ளது. ஆனால், இலங்கைக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியம் கடனுதவி ஏதும் செய்யவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் இலங்கைக்கு எரிபொருள் வாங்க கடனுதவி செய்ய முன் வரவில்லை. இலங்கைக்கு இந்தியா எரிபொருள், மருந்துப்பொருட்கள், பணம் என 27 ஆயிரம் கோடி ரூபாய் (3.5 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிற்கு கடனுதவி செய்து வருகிறது. இலங்கைக்கு இந்தியா செய்து வரும் கடனின் அளவு அதன் எல்லையை நெருங்கி விட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் கடனுதவி நீட்டிப்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.


Tags :