Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By: Monisha Sat, 23 May 2020 1:36:47 PM

வெளி இடங்களில் இருந்து வந்தவர்கள் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசின் வழிமுறையை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது.

chief minister edappadi palanisamy,coronavirus,tamil nadu,coronal examination ,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,முக கவசம்,கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. புறநகர் பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

ஆட்டோக்கள் இயக்கவும், சலூன்கள் திறக்கப்பட்டுள்ளது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :