Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

By: vaithegi Mon, 19 June 2023 09:29:00 AM

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதிலும் குறிப்பாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. எனவே இதற்கேற்ப சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

holiday,vellore,heavy rain ,விடுமுறை,வேலூர் ,கனமழை

இதையடுத்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்திற்கும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :