Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏழே நிமிடங்கள்தான்... பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது

ஏழே நிமிடங்கள்தான்... பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது

By: Nagaraj Thu, 29 Dec 2022 4:36:27 PM

ஏழே நிமிடங்கள்தான்... பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது

சென்னை: பொங்கல் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.

சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்கின்றனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியூர்களுக்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பி வழிகின்றன. வழக்கமான ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யும் நாளில் விற்றுத் தீர்ந்துவிடும்.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் எப்போது வெளியாகும், முன்பதிவு எப்போது தொடங்கும் என பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

pongal,reservation,special trains, ,சிறப்பு ரயில்கள், பொங்கல், முன்பதிவு

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-நாகர்கோவில், கொச்சுவேலி-தாம்பரம், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்களும், மாற்றுப்பாதையாக 5 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.

அதிகாலையில் இருந்தே காத்திருந்தனர். காலை 8 மணிக்கு கவுன்டர் திறந்ததும் டிக்கெட் வாங்க பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனால் முன்பதிவு செய்த 7 நிமிடங்களிலேயே சிறப்பு ரயில்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கவுண்டரில் நின்றவர்களில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தது. கவுன்டரில் காத்திருந்த 95 சதவீதம் பேர் டிக்கெட் கிடைக்காமல் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags :
|