Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 11-ம் வகுப்புக்கான தேர்வில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி

11-ம் வகுப்புக்கான தேர்வில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி

By: Monisha Wed, 10 June 2020 5:35:42 PM

11-ம் வகுப்புக்கான தேர்வில் ரத்து செய்யப்பட்ட பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மற்றும் நடைபெறாமல் உள்ள 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றித் தேர்ச்சி பெறுவதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவது எப்படி என்பது குறித்துக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.

11th class,chemistry,accounting,geography,all pass ,11-ம் வகுப்பு,வேதியியல்,கணக்குப் பதிவியல்,புவியியல்,அனைவரும் தேர்ச்சி

அதில் கூறியிருப்பதாவது:- 11-ம் வகுப்புக்கான தேர்வில் ரத்து செய்யப்பட்ட வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களில் மட்டும் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள்.

12-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. அது போல 11-ம் வகுப்பிலும் தேர்வு நடைபெற்ற பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :