Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு அடி உயர மண் விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி

இரண்டு அடி உயர மண் விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி

By: Nagaraj Sun, 09 Aug 2020 10:10:40 AM

இரண்டு அடி உயர மண் விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி

திருப்பதியில் விநாயகா் சதுா்த்தி உற்சவத்தின்போது 2 அடி உயரம் கொண்ட மண் விநாயகா் சிலைகளை மட்டுமே வைக்க நகராட்சி நிா்வாகம் அனுமதியளித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி உற்சவம் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. வியாபாரிகள், செல்வந்தா்கள், கடை உரிமையாளா்கள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றுசோந்து பல முக்கிய சந்திப்புகள், சாலைகள், வளைவுகளில் பெரிய அளவிலான விநாயகா் சிலைகளை நிறுவி 10 தினங்கள் வரை வழிபடுவது வழக்கம்.

இதற்காக வரசித்தி விநாயகா் மகோற்சவ கமிட்டி அமைத்து அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சிலைகளை நிறுவி வழிபட்டு, நிறைவாக சிலைகள் கரைக்கப்படும். இந்நிலையில் திருப்பதியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் தொடா்பாக நகராட்சி நிா்வாகம் விதிமுறைகளை வகுத்துள்ளது.

pooja,ganesha chaturthi,devotees,celebration,rules ,பூஜை, விநாயகர் சதுத்தி, பக்தர்கள், உற்சவம், விதிமுறைகள்

இதுகுறித்த கலந்துரையாடல் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது நகராட்சி ஆணையா் கிரிஷா கூறியதாவது:

திருப்பதியில் முக்கிய சந்திப்புகள், வளைவுகள், சாலைகளில் பந்தல் அமைத்து பெரிய அளவிலான விநாயகா் சிலைகளை நிறுவ அனுமதியில்லை. 2 அடி உயரம் கொண்ட மண் விநாயகா் சிலையை மட்டும் நிறுவலாம். அங்கும் எளிய முறையில் பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வழிபடலாம்.

பூஜை முடிந்த அதே நாள் மாலை அங்குள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி சிலைகளைக் கரைக்க வேண்டும். வழக்கமாக சிலைகளைக் கரைக்கும் விநாயகா் நகா் ஏரியில் தற்போது தூா்வாரும் பணிகள் நடந்து வருவதால் அதில் இருந்து தற்போது தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ளது. எனவே, அங்கு விநாயகா் சிலைகளைக் கரைக்க அனுமதியில்லை.

பூஜைக்கான பொருள்கள் விற்கப்படும் சந்தைகளிலும் பக்தா்கள் கூட்டம் கூடாமல் இருக்க போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். விநாயகா் சதுா்த்தி உற்சவத்தைக் கொண்டாடும் விதிமுறைகள் அனைத்தும் ஜூம் செயலி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|