Advertisement

தடுப்பூசியை பெற ஒன்ராறியோ மக்கள் தயங்குவதாக தகவல்

By: Nagaraj Tue, 29 Dec 2020 1:35:59 PM

தடுப்பூசியை பெற ஒன்ராறியோ மக்கள் தயங்குவதாக தகவல்

ஒன்ராறியோ மக்கள் தயக்கம்... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசியை பெற ஒன்ராறியோ மக்கள் தயக்கம் காட்டி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் ஒன்றாரியை சேர்ந்தவர் தடுப்பூசி மருந்தைப் பெற்றிருந்தாக தரவுகளில் தெளிவாகின்றது. ஃபைசர் தடுப்பூசியை வழங்கிய மாகாணங்களில் 100,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒன்ராறியோ கடைசி இடத்தில் உள்ளது என்பதை உயிரியல் ஆய்வாளர் ரியான் இம்க்ரண்ட் தெரிவித்துள்ளார்.

people reluctance,corona vaccine,ontario,data ,மக்கள் தயக்கம், கொரோனா தடுப்பூசி, ஒன்ராறியோ, தரவுகள்

ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு 100,000 பேருக்கும் 59 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. இதுவரை யாரும் தடுப்பூசிகளைப் பெற முடியாத நுனாவுட், வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் யூகோனுக்கு மேலே உள்ள பட்டியலில் உள்ளது.

ஒன்ராறியோவில் டிசம்பர் 24ஆம் திகதி நிலவரப்படி 10,756 அளவு கொவிட் -19 தடுப்பூசியை வழங்கியதாக அரச வலைத்தளம் தெரிவித்துள்ளது.

Tags :