Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்பார்த்தது கிடைக்காததால் வீட்டின் விலையை குறைத்தார் ஒன்ராறியோ முதல்வர்

எதிர்பார்த்தது கிடைக்காததால் வீட்டின் விலையை குறைத்தார் ஒன்ராறியோ முதல்வர்

By: Nagaraj Thu, 28 July 2022 11:27:08 AM

எதிர்பார்த்தது கிடைக்காததால் வீட்டின் விலையை குறைத்தார் ஒன்ராறியோ முதல்வர்

கனடா: விற்க முடியாததால் விலையை குறைத்தார்... ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தனது வீட்டை விற்பனை செய்து கொள்ள முடியாது வீட்டின் விலையை குறைத்துள்ளார்.

இடாபிகொக்கில் அமைந்துள்ள தனது வீட்டை 3.2 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்வதாக அறிவித்திருந்தார். எனினும், வீட்டை விற்பனை செய்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. மாகாணத்தில் வீடுகளின் விலைகள் தொடர்ச்சியாக குறைவடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக வீட்டின் விலை 3.2 மில்லியன் டொலர்கள் என்ற அறிவிப்பினை நீக்கி 2.8 மில்லியன் டொலர்கள் என மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு வீடுகளை விற்பனை செய்து கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

chief port,home,sale,price reduction,notice ,முதல்வர் போர்ட், இல்லம், விற்பனை, விலை குறைப்பு, அறிவிப்பு

கடந்த பிப்ரவரி மாத்த்துடன் ஒப்பீடு செய்யும் போது வீடுகளின் விலைகள் 14 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. வீடுகள் விற்பனை செய்யப்படுவதாக விலைகளுடன் முன்னர் வெளியிடப்பட்ட பல அறிவிப்புக்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் போர்டின் குறித்த இல்லத்தின் எதிரில் பல தடவைகள் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் காலப் பகுதியில் இவ்வாறு போராட்டங்கள் கூடுதலாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|