Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற காங்கிரஸின் முகம் உம்மன் சாண்டி

ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற காங்கிரஸின் முகம் உம்மன் சாண்டி

By: Nagaraj Tue, 18 July 2023 11:14:00 AM

ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற காங்கிரஸின் முகம் உம்மன் சாண்டி

கேரளா: கேரளா மாநிலம் புதுப்பள்ளி கே.ஓ.சாண்டி - பேபி சாண்டி தம்பதியினருக்கு 1943-ம் ஆண்டு அக்டோபர் 31-ம்.தேதி கோட்டயம், குமரகத்தில் பிறந்தார் உம்மன் சாண்டி.

பள்ளி படிக்கும்போதே மாணவர் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார். 1962-ல் காங்கிரஸ் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு-வின் கோட்டயம் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார். 1965-ல் மாநில செயலாளராகவும், 1967-ல் கே.எஸ்.யு மாநில தலைவராகவும் பதவி வகித்தார். 1969-ல் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1970-ல் தனது 27-ம் வயதில் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். சி.பி.எம் கோட்டையான புதுப்பள்ளியில் எம்.எல்.ஏ-வாக இருந்த இ.எம்.ஜார்ஜ் என்பவரை தோற்கடித்ததால் உம்மன்சாண்டி மீதான மதிப்பு தொண்டர்களுக்கு இன்னும் அதிகரித்தது. புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார் உம்மன் சாண்டி.

umanshandi,50 years,mla,chief minister,minister,anjali ,உம்மன்சாண்டி, 50 ஆண்டுகள், எம்எல்ஏ, முதல்வர், அமைச்சர், அஞ்சலி

1977-ல் கருணாகரன் முதல்வராக இருந்த சமயத்தில், தொழில்துறை அமைச்சராக இருந்தார் உம்மன்சாண்டி. 1982-ல் உள்துறை அமைச்சராகவும், 1991-ல் நிதித்துறை அமைச்சராகவும் இருந்தார். 2004-ல் ஏ.கே.ஆன்றணி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கேரள முதல்வரானார் உம்மன் சாண்டி. 2006 முதல் 2011-வரை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

2011-ல் மீண்டும் முதல்வர் ஆனார். உம்மன் சாண்டியின் மனைவி மரியாம்மா உம்மன் ஆலப்புழாவைச் சேர்ந்தவர். 79 வயதில் மரணமடைந்த உம்மன் சாண்டியின் உடல் பெங்களூரில் இருந்து கேரளா கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

Tags :
|