Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலே துறைமுகத்தில் கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் திறப்பு

காலே துறைமுகத்தில் கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் திறப்பு

By: Nagaraj Sat, 20 June 2020 6:02:51 PM

காலே துறைமுகத்தில் கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் திறப்பு

கடலுக்கடியில் அருங்காட்சியகம்... இலங்கையின், காலே துறைமுகத்தில், முதன் முறையாக, கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை, கடற்படைத் தளபதி பியால் டி சில்வா, நீருக்கடியில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

சுமார் 50 அடி ஆழத்தில், கடற்படை வீரர்களால் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில், கான்கிரீட் மற்றும் எஃகால் ஆன பீரங்கி உள்ளிட்ட பண்டைய காலப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

museum,undersea,opening,sri lanka ,அருங்காட்சியகம், கடலுக்கு அடியில், திறப்பு, இலங்கை

சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வருவாயை பெரிதும் சார்ந்துள்ள இலங்கையில், கொரோனா ஊரடங்கால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் வெளிநாட்டினர் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டச்சு கோட்டையை காண காலே வரும் அனைவரும், நிச்சயம் இந்த அருங்காட்சியகத்தை கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு பிற நாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|