Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புகார் மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் மையம் திறப்பு

புகார் மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் மையம் திறப்பு

By: Nagaraj Thu, 20 July 2023 9:24:04 PM

புகார் மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் மையம் திறப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் முறையாக காவல்நிலையங்களில் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் மனுவிசாரணை கண்காணிப்பு மையம் திறந்துவைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் வகையில் முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட அறையை இன்று 20.07.2023 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி திறந்து வைத்தார்கள்.

இந்த கணினி மென்பொருள் மூலம் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் மனுக்கொடுக்க வரும் மனுதார்களின் முகவரிகள் அடங்கிய முழுத் தகவல்கள் காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்களால் (Receptionist) இந்த மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படும்.

soft material,assistance,action,crimes,petitions ,மென் பொருள், உதவி, நடவடிக்கை, குற்றங்கள், மனுக்கள்

மனுதார்களை காவல் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் (Receptionist) எவ்வாறு வரவேற்றார்கள் என்பதையும் அவரகள் மரியாதையுடன் நடத்தப்பட்டார்களா? என்ற விவரங்கள் இந்த மென்பொருள் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடிப் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

மனுதாரர்கள் எவ்வித பிரச்சனை சம்மந்தமாக புகார் செய்துள்ளார்கள் மற்றும் அவர்களுக்கு மனு ரசீது வழங்கப்பட்டதா? என்ற விவரங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மேற்பார்வையிடப்படும்.

மேலும் காவல் நிலையங்களில் பணிபுரியும் நிலைய வரவேற்பாளர்கள் (Receptionist) ஒவ்வொருவரும் மனுதாரர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை மனுவிசாரணை கண்காணிப்பு மையத்தின் மூலம் ஒவ்வொரு புகார் மனுதாரர்களிடமும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருத்துக்கள் (Feedback) தெரிந்துகொள்ளப்படும்.

மனுதாரர்கள் கொடுத்த புகாருக்கு மனு ரசீது வழங்கப்பட்டுள்ளதா, முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்கள் இதில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த மென்பொருள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு எத்தனை மனுதாரர்கள் வருகிறார்கள் மற்றும் எவ்வித குற்றங்கள் தொடர்பான மனுக்கள் அதிகம் பதிவாகிறது என்பதை பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எளிதில் அறிநத்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

Tags :
|
|