Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி திறப்பு .. முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

பள்ளி திறப்பு .. முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

By: vaithegi Mon, 05 June 2023 11:21:24 AM

பள்ளி திறப்பு   ..  முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரையிலான மாணவர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

எனவே இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் வருகிற ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

minister of school education,chief minister , பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,முதலமைச்சர்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வருகிற 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக உள்ள நிலையில், பள்ளி திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வருடன் ஆலோசனைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார் என தெரிகிறது.

Tags :