Advertisement

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு

By: vaithegi Mon, 05 June 2023 12:23:08 PM

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு  மீண்டும் தள்ளிவைப்பு

சென்னை: ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு .... தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரை வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் நிலவிவரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

எனவே இதன் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் வருகிற ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

opening of schools,opening of schools , பள்ளிகள் திறப்பு  , பள்ளிகள் திறப்பு

எனினும் தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையவில்லை. எனவே பள்ளிகள் திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வருகிற ஜூன் 12-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகளான 1 முதல் 5 -ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 14-ம் தேதி திறக்கப்படுகின்றன. கோடை வெயிலின் தாக்கம் குறையாததை அடுத்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியபின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tags :