Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.. நாற்று நடும் பணிகள் மும்முரம்

குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.. நாற்று நடும் பணிகள் மும்முரம்

By: Nagaraj Sat, 17 June 2023 8:02:41 PM

குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.. நாற்று நடும் பணிகள் மும்முரம்

தஞ்சாவூர்: நாற்று நடும் பணி... தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து நாற்று நடும்பணியில் பெண்கள் ஈடுப்பட்டனர்.

மேலும் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புற பாடல் பாடி, ஆட்டம் போட்டு உற்சாகமாக நாற்று நட்டனர். தஞ்சை மாவட்டம் கல்லனையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம். தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 951 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

water,irrigation,farmers,planting,market ,தண்ணீர், முறைப்பாசனம், விவசாயிகள், நாற்று நடும் பணி, கடைமடை

தஞ்சை அருகில் உள்ள மணக்கரம்பை, கிராமத்தில் நாற்று நடும் பணியில் பெண்கள் ஈடுப்பட்டனர். களைப்பு தெரியாமல் இருக்க நடவு பாடல் பாடி, ஆட்டம் ஆடி உற்சாகமாக நாற்று நட்டனர்.

மேலும் கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் வகையில் முறைப்பாசனம் இல்லாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags :
|