Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆபரேஷன் அஜய் இன்று தொடக்கம்... இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை

ஆபரேஷன் அஜய் இன்று தொடக்கம்... இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை

By: Nagaraj Thu, 12 Oct 2023 12:25:10 PM

ஆபரேஷன் அஜய் இன்று தொடக்கம்... இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை

புதுடில்லி: ஆபரேஷன் அஜய்... இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் அஜய் இன்று தொடங்குகிறது.

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் அஜய் இன்று தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

special flights,arrangements,operation ajay,plan,central govt ,சிறப்பு விமானங்கள், ஏற்பாடுகள், ஆபரேஷன் அஜய், திட்டம், மத்திய அரசு

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், இந்தியத் தூதரகத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப விரும்பினால், அவர்களை பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்கென சிறப்பு விமானங்கள் மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|