Advertisement

தீபாவளி பண்டிகை .... 16,888 அரசு பஸ்கள் இயக்கம்

By: vaithegi Thu, 20 Oct 2022 8:09:33 PM

தீபாவளி பண்டிகை  ....    16,888 அரசு பஸ்கள் இயக்கம்

அரியலூர் : 16,888 அரசு பஸ்கள் இயக்கம் ...... அரியலூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்.

இதனை அடுத்து நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்படும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

government buses,diwali ,அரசு பஸ்கள்,தீபாவளி

மேலும் அரசு பஸ்களில் பார்சல் சேவை வசதி தற்போது சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே பார்சல் வசதி சேவை வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. இதனுடைய முழுமையான வெற்றியை பொறுத்து தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் பார்சல் வசதி சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 16,888 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும் அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போக்குவரத்து கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Tags :