Advertisement

மொஹரம் பண்டிகையையோட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Fri, 28 July 2023 11:01:02 AM

மொஹரம் பண்டிகையையோட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது: சனி, ஞாயிறு வார விடுமுறை, மொஹரம் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில், பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதேபோன்று சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடு துறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 150 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை போன்ற இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


special buses,moharram festival ,சிறப்பு பேருந்துகள்,மொஹரம் பண்டிகை


மேலும் கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பேருந்துகளும் என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இன்று மற்றும் நாளை இயக்கப்படவுள்ளன. இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்கு செல்ல வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதையடுத்து பிற தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணி அமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags :