Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் தற்போது குறைந்த விலைக்கு வீடுகள் வாங்க அதிகமாகி வரும் வாய்ப்புகள்

சென்னையில் தற்போது குறைந்த விலைக்கு வீடுகள் வாங்க அதிகமாகி வரும் வாய்ப்புகள்

By: Karunakaran Mon, 07 Sept 2020 7:05:33 PM

சென்னையில் தற்போது குறைந்த விலைக்கு வீடுகள் வாங்க அதிகமாகி வரும் வாய்ப்புகள்

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பொருளாதர மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, ரியல் எஸ்டேட் துறையும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பலர், தொழிலை விட்டுவிட்டு சொந்த ஊருக்கே சென்றுவிட்டதால், தற்போது புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடக்கவில்லை. இதனால் வீடுகள் விற்பனை மந்தமாகியுள்ளது.

தற்போது முன்பைவிடஇரண்டு மடங்கு அதிகமாக வீடுகள் விற்பனை மந்தமாகியுள்ளது. வீடுகளை நஷ்டத்திற்கு விற்றுவிட வேண்டிய நிலையில் பில்டிங் புரோமோட்டார்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் தற்போது சுமார் 90 ஆயிரம் முதல் ஒருலட்சத்துக்கும் அதிகமாக வீடுகள் விற்கப்படாமல் உள்ளதாக சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத் தலைவர் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

houses,low prices,chennai,building promotors ,வீடு, குறைந்த விலை, சென்னை, கட்டிட ஊக்குவிப்பாளர்கள்

கட்டுமானத்துறையில் கடந்த சில ஆண்டுகளில் பல ஆயிரம் பேர் வேலையை இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், தனியார் கட்டுமான ஒப்பந்ததாரர்கள், மண் எடுப்பவர்கள், கம்பி கட்டுபவர்கள், எலக்ட்ரீசியன், டைல்ஸ் ஒட்டுபவர், ஆசாரிகள், இன்டீரியர் டிசைன் பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி, பில்டிங் பிளான் அப்ரூபவல் வாங்குவதில் ஏற்படும் தாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் வீடுகள் கட்டுவதும், விற்பனை செய்வதும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பொருளாதர மந்த நிலை காரணமாக மக்கள் நிரந்தர வேலைகள் இன்றி வருமானம் இழந்துள்ளனர். இதனால் க்களால் வீடுகள் வாங்க முடியவில்லை. இதனால் வீடுகள் வாங்க ஆசைப்படுவோர் இந்த தருணத்தில் குறைந்த விலையில் வீட்டை வாங்க முடியும்.

Tags :
|