Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது: ஓ.பி.எஸ். அறிக்கை

ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது: ஓ.பி.எஸ். அறிக்கை

By: Nagaraj Sat, 04 Feb 2023 7:20:35 PM

ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது: ஓ.பி.எஸ். அறிக்கை

சென்னை: ஓபிஎஸ்., அறிக்கை... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், பண்ரூட்டி ராமசந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பன்னீர்செல்வத்தின் அறிக்கையை வாசித்தார். அதில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் ஆதரிப்போம்.

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம். ஒருங்கிணைப்பாளர் பதவியில் நான் நீடிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இடை பொதுச்செயலாளர் பதவியை நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ops,by-election,support,judgment,joy ,ஓ.பி.எஸ், இடைத் தேர்தல், ஆதரவு, தீர்ப்பு, மகிழ்ச்சி

இதுகுறித்து ஓபிஸ் தரப்பில் பண்ரூட்டி ராமசந்திரன் கூறுகையில், பொதுக்குழுவில் வேட்பாளர் தேர்வு எப்படி நடைபெறுகிறது என்பதை பொறுத்து முடிவெடுக்கப்படும். எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. எங்களை எதிர்த்தவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்ற அண்ணாமலையின் வேண்டுகோள் பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags :
|