Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துருக்கியில் எதிர்கட்சி வேட்பாளர் கெமல் வெற்றி பெற அதிக வாய்ப்பு

துருக்கியில் எதிர்கட்சி வேட்பாளர் கெமல் வெற்றி பெற அதிக வாய்ப்பு

By: Nagaraj Mon, 15 May 2023 7:56:08 PM

துருக்கியில் எதிர்கட்சி வேட்பாளர் கெமல் வெற்றி பெற அதிக வாய்ப்பு

அங்காரா: துருக்கியில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கெமல் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் (வயது 69) அங்கு 2003ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறார். எர்டோகன் 2003ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2014ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதையடுத்து 2014-ம் ஆண்டு துருக்கி அதிபராக எர்டோகன் தேர்வு செய்யப்பட்டார்.

அதில் இருந்து கடந்த 9 ஆண்டுகளாக அங்கு அதிபராக பணியாற்றி வருகிறார். 2016-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றபோது, அதைத் தோற்கடித்து எர்டோகன் தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் தனது சக்தியை மேலும் அதிகரித்தார்.

expectation,military,turkey, ,எதிர்பார்ப்பு, சர்வாதிகாரம், பொதுமக்கள்

துருக்கியில் எர்டோகன் 20 ஆண்டுகளாக பிரதமராகவும், அதிபராகவும் ஆட்சி செய்து வருகிறார். வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நிலநடுக்கத்தின் போது போதிய மீட்பு நடவடிக்கைகளால் 50,000 பேர் உயிரிழந்ததால் மக்கள் அவர் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில் துருக்கியில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கெமல் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், துருக்கியிலும் நேற்று எம்.பி.க்களுக்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கெமாலுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|