Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ள எதிர் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்

பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ள எதிர் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்

By: Karunakaran Sun, 01 Nov 2020 6:06:58 PM

பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ள எதிர் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்

பீகாரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதன்படி, பிரதமர் மோடியின் பிரச்சார பயணம் தொடங்கிய நிலையில், அவருக்கு எதிர் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் டுவிட்டர் மூலம் 11 கேள்விகளை எழுப்பியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பிரதமர் மோடி அரசை விமர்சிப்பதற்கும் தாக்கி பேசுவதற்கும் எதிர்க்கட்சிகள் அடிக்கடி பயன்படுத்தும் வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர்தல், பீகார் சிறப்பு மாநில அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களை தேஜஸ்வி இன்று கேள்விகளாக பட்டியலிட்டிருந்தார்.

chief ministerial candidate,tejaswi yadav,narendra modi,bihar ,முதலமைச்சர் வேட்பாளர், தேஜஸ்வி யாதவ், நரேந்திர மோடி, பீகார்

அதில் தேஜஸ்வி, பிரதமரே, நாட்டின் மிகவும் வறுமையான மாநிலங்களில் ஒன்றான பீகாரில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியை குறைக்க மொத்த பட்ஜெட்டில் 2 சதவீதத்திற்கும் குறைவாக ஏன் செலவிடப்படுகிறது என்று சொல்லுங்கள்? 15 ஆண்டுகளாக என்.டி.ஏ அரசு உள்ளபோதும் பீகாரில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினி இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில் இந்த வார தொடக்கத்தின் போது, பீகாரில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, லாலு பிரசாத் யாதவ் ஆட்சியின் போது மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், தேஜஸ்வி யாதவை காட்டு தர்பாரின் இளவரசர் என்றும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :