Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூர் விவகாரம் குறித்து ஜனாதிபதியிடம் முறையிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

மணிப்பூர் விவகாரம் குறித்து ஜனாதிபதியிடம் முறையிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

By: Nagaraj Wed, 02 Aug 2023 7:45:42 PM

மணிப்பூர் விவகாரம் குறித்து ஜனாதிபதியிடம் முறையிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

புதுடில்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து முறையீட்டனர்.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே வன்முறை நடந்து வருகிறது. மே 3ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் வன்முறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறின. அந்த வகையில் கடந்த மே 4ம் தேதி குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது.

affairs,appeal,manipur,mps,opposition,president ,எதிர்க்கட்சி, எம்.பி.க்கள், ஜனாதிபதி, மணிப்பூர், முறையீடு, விவகாரம்

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி மணிப்பூர் சென்று எதிர்கட்சியை சேர்ந்த 21 எம்.பி.க்கள் நிலைமையை ஆய்வு செய்தனர். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட எம்.பி.க்கள் மாநில ஆளுநரையும் சந்தித்தனர். பின்னர் எம்.பி.க்கள் குழு டெல்லி திரும்பியது.

இந்நிலையில், மணிப்பூரில் கள நிலவரத்தை ஆய்வு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு இன்று ஜனாதிபதி முர்முவை சந்தித்தது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திரௌபதி முர்முவிடம் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன், வன்முறையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தகவல்கள் மற்றும் கள நிலவரங்களை அறிக்கையாக ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.

Tags :
|
|