Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துருக்கி தேர்தலில் முறைகேடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

துருக்கி தேர்தலில் முறைகேடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

By: Nagaraj Wed, 31 May 2023 3:12:04 PM

துருக்கி தேர்தலில் முறைகேடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

துருக்கி: தேர்தலில் முறைகேடு என குற்றச்சாட்டு... துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வரும் தய்யீப் எர்டோகன், அந்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி - சிரியஎல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 50,000க்கும் அதிகமானோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இந்த நிலநடுக்கத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர முடுக்கிவிடவில்லை என்று அதிபர் எர்டோகன் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

தவிர, கடந்த சில மாதங்களாகப் பொருளாதாரரீதியாகவும் எர்டோகன் மீது மக்களிடையே எதிர்ப்பு அலை இருந்துள்ளது. இதையடுத்துதான், அதிபர் எர்டோகனைப் பதவியில் இருந்து இறக்க முடிவு செய்த எதிர்க்கட்சிகள், அதற்காக மக்களின் துணையுடன் அனைத்தும் ஒன்றிணைந்தன.

இதையடுத்து எர்டோகனை எதிர்த்து குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமால் கிளிக்டரோக்லு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்தச் சூழலில் பெரும் பதற்றத்துக்கிடையே கடந்த 15ம் தேதி துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர்.

impeachment,election,erdogan,congratulations,opposition parties ,குற்றச்சாட்டு, தேர்தல், எர்டோகன், வாழ்த்துக்கள், எதிர்கட்சிகள்

துருக்கியின் அரசியல் வழக்கப்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மையாகக் கருதப்படும். அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், எர்டோகன் பெரும்பான்மையை இழந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் கடந்த மே 28-ம் தேதி நடைபெற்றது. இதில் எர்டோகன் 52% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்தப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார்.

இதையடுத்து அவர் அந்நாட்டின் அதிபராக மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் எர்டோகனுக்கு, இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எதிர்கட்சிகள் தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

Tags :