Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்க் கட்சிகளாக இருந்தாலும் எதிரிகள் கிடையாது - ஜோ பைடன்

எதிர்க் கட்சிகளாக இருந்தாலும் எதிரிகள் கிடையாது - ஜோ பைடன்

By: Karunakaran Sat, 07 Nov 2020 3:19:01 PM

எதிர்க் கட்சிகளாக இருந்தாலும் எதிரிகள் கிடையாது - ஜோ பைடன்

அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். தற்போது வரை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறார். ஆனால் வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் என குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் கூறி வருகிறார். வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

opposition parties,enemies,joe biden,america ,எதிர்க்கட்சிகள், எதிரிகள், ஜோ பிடன், அமெரிக்கா

இருவரும் இப்படி மறைமுகமாக மோதி வரும் நிலையில் ஜோ பிடன் டுவிட்டர் பதிவுகள் மூலம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், நாம் எதிரெதிர் கட்சியாக இருக்கலாம், ஆனால் எதிரிகள் கிடையாது, நாம் அமெரிக்கர்கள். நம்முடைய அரசியலின் நோக்கம் முற்றிலும் இடைவிடாத போர் கிடையாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என பைடன் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஜோ பிடன் அதிபராக இன்னும் சில வாக்கு எண்ணிக்கையே போதும்.

Tags :