Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வலுக்கும் எதிர்ப்பு குரல்கள்... தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?

வலுக்கும் எதிர்ப்பு குரல்கள்... தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?

By: Nagaraj Wed, 23 Nov 2022 11:17:15 AM

வலுக்கும் எதிர்ப்பு குரல்கள்... தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?

சென்னை: எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன... தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரை மாற்றக் கோரி பல்வேறு இடங்களில் காங்கிரஸார் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்திய ஒற்றுமைப் பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய இந்த பயணத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கட்சியினர் சொல்கின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியில் குமரிக்கு அருகில் நெல்லை மாவட்டத்தில் தொடங்கியுள்ள பிரச்னை டெல்லி வரை சென்றுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது அவருக்கு கட்சிக்குள்ளாகவே எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இது கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வெளிப்படையாக வெடித்தது.

congress,state president,voice of opposition,change,commitment ,
காங்கிரஸ், மாநில தலைவர், எதிர்ப்பு குரல், மாற்றம், உறுதி

சத்தியமூர்த்தி பவனில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் முன்னிலையில் அதிருப்தி, வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லை மாவட்ட தலைவருக்கும், நாங்குநேரி எம்.எல்.ஏ-விற்கும் இடையிலான அரசியல் போட்டி, சென்னையில் அடிதடியாக மாறியது.

இந்த பிரச்னை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில், ஒரு தரப்பிற்கு ஆதரவாக கே.எஸ்.அழகிரி செயல்படுவதாக மற்றொரு தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் டெல்லி சென்று, தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் புகார் அளித்துள்ளனர். அப்போது மாநிலத் தலைவர் மாற்றம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர். இதை மேலிடம் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகையால், மாநிலத் தலைவர் விரைவில் மாற்றம் செய்யப்படுவார் என்கிறார்கள்.

Tags :
|