Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி போராட்டம் நடத்த போவதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிப்பு

வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி போராட்டம் நடத்த போவதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிப்பு

By: vaithegi Tue, 11 July 2023 10:54:20 AM

வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி போராட்டம் நடத்த போவதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிப்பு

சென்னை: வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் ... சென்னையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கோடநாடு வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தது திமுக. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகியும் கோடநாடு வழக்கில் எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டியது அரசின் கடமை.

ops,struggle ,ஓபிஎஸ் ,போராட்டம்


துணை முதல்வராக இருந்த போது தன்னிடம் அதிகாரங்கள் எதுவும் இல்லை என்பதால் கோடநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்டவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும். கோடநாடு வழக்கை விரைந்து விசாரிக்காததை கண்டித்து அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்றார்.

மேலும் அத்துடன் பாரதிய ஜனதா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு வரவில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் வருகிற 18ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.qas

Tags :
|