Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வந்தே பாரத் ரயில் குமரி வரை நீட்டிக்க .. ஓபிஎஸ் வலியுறுத்தல்

வந்தே பாரத் ரயில் குமரி வரை நீட்டிக்க .. ஓபிஎஸ் வலியுறுத்தல்

By: vaithegi Mon, 25 Sept 2023 1:48:02 PM

வந்தே பாரத் ரயில் குமரி வரை நீட்டிக்க ..  ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொடக்கத்தில், சென்னைக்கும் திருநெல்வேலிக்கும், சென்னைக்கும்,

விஜயவாடாவுக்கும் இடையே 2 புதிய ரயில்கள் உட்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்ததற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையடுத்து சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரமாக குறைந்துஉள்ளது தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

ops,vande bharat railway ,ஓபிஎஸ் ,வந்தே பாரத் ரயில்

எனினும், இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

எனவே, வந்தே பாரத் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|