Advertisement

புதிய நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து பேசிய ஓ.பி.எஸ்.,

By: Nagaraj Sat, 05 Nov 2022 10:45:21 AM

புதிய நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து பேசிய ஓ.பி.எஸ்.,

பெரியகுளம்: புதிய நிர்வாகிகளுடன் சந்திப்பு... தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கைலாசபுரம் பண்ணை வீட்டில் ஓ. பன்னீர் செல்வத்தை புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இவர்கள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர்.

புதிதாக கட்சியில் இணைந்த 50 பேரும் ஓபிஎஸ்-க்கு மலர் கொத்துக்கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு கோவை செல்வராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவில் தொண்டர்கள் நம் பக்கம் தான் இன்றளவும் இருக்கிறார்கள். அந்த பக்கத்தில் இருந்து நிறைய தொண்டர்கள் இந்த பக்கம் வருவதற்கு விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் அவர்களால் வர முடியவில்லை.

ஒருவேளை அந்த பக்கம் இருக்கும் தொண்டர்கள் வந்தாலும் உங்களுக்கு தான் முதலில் முன்னுரிமை கொடுக்கப்படும். நீங்கள் எப்போதும் அண்ணன் ஓபிஎஸ்-க்கு நெருக்கமானவர்களாக இருப்பீர்கள் என்று கூறினார். ஒவ்வொரு ஒன்றியமாக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

ops,new administrators,meeting,coordinator,party ,ஓ.பி.எஸ்., புதிய நிர்வாகிகள், சந்திப்பு, ஒருங்கிணைப்பாளர், கட்சி

கோவை சாஸ்திரி மைதானத்தில் 5 ஆயிரம் பேரை திரட்டி செயல் வீரர்கள் கூட்டம் வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது என்று கூறினார். இந்த கூட்டத்தின் மூலம் எடப்பாடியின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அவரையே ஆட்டம் காண வைக்கப் போவதாகவும் அதிமுகவில் பேசி கொள்கிறார்கள். இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் அடிமட்ட தொண்டர்கள் கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும். இதனால்தான் நானும் இபிஎஸ்-ம் முதல்வர் பதவிக்கு வர முடிந்தது. அடிமட்ட தொண்டர்கள் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்ற நோக்கத்தில் தான் எம்ஜிஆர் கட்சியை உருவாக்கினார்.


எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்ட நிலையில், சிலர் சுயநலத்திற்காக கட்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறினார்.

Tags :
|