Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் உயர்ந்துவரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் ... ஓபிஎஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உயர்ந்துவரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் ... ஓபிஎஸ் வலியுறுத்தல்

By: vaithegi Sat, 24 Sept 2022 11:24:55 AM

தமிழ்நாட்டில் உயர்ந்துவரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் ...  ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் உயர்ந்துவரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து இதுக்குறித்து அதிமுக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் 'ப்ளூ' காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க அரசை வலியுறுத்தி நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

ஆனால், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களோ பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் தேவையில்லை எனவும், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனவும்தெரிவித்து இருந்தார்.எனினும் , கள நிலைமை வேறுவிதமாகத்தான் இருக்கிறது. 'ப்ளூ' காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் 2 மடங்காக அதிகரித்து பொது மக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது எனவும் தகவல்கள் வருகின்றன.

ops,corona,stress ,ஓபிஎஸ் ,கொரோனா ,வலியுறுத்தல்

எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சொன்னாலும், சென்னை மாநகராட்சியும் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தியுள்ளன.

ஆனால் நேற்று 100 இடங்களில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களில் 6,860 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,798 பேருக்கு இன்ஃபுளுவென்சா எனப்படும் 'ப்ளூ' தொற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் 25 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் 'ப்ளூ' காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்கள் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|